பேரிகை அருகே மரத்தில் இருந்து தவறிவிழுந்து பள்ளி மாணவன் சாவு
பேரிகை அருகே மரத்தில் இருந்து தவறிவிழுந்து பள்ளி மாணவன் இறந்தார்.
கிருஷ்ணகிரி
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே உள்ள மிடுதேப்பள்ளியை சேர்ந்தவர் லோகேஷ்.
இவருடைய மகன் தனுஷ் (வயது 11). இவன் பேரிகை அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் நேற்று முன்தினம் மிடுதேப்பள்ளியில் உள்ள கொய்யா மரம் ஒன்றின் மேலே ஏறி காய்களைபறித்துக் கொண்டிருந்தான்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவன் தவறி கீழே விழுந்தான். இதில் பலத்த காயமடைந்த தனுசை உறவினர்கள் மீட்டு சூளகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே தனுஷ் இறந்து விட்டான்.
இது குறித்து தகவல் அறிந்ததும் பேரிகை போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story