இரணியல் அருகே பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை


இரணியல் அருகே பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை
x

இரணியல் அருகே பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

குளச்சல்:

இரணியல் அருகே பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

மாணவனுக்கு பாலியல் தொல்லை

இரணியல் அருகே கண்ணாட்டுவிளை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் அருள்ஜீவன் (வயது 47). இந்த பள்ளியில் ஆலங்கோடு பகுதியை சேர்ந்த 13 வயது மாணவன் 8-ம் வகுப்பு படித்து வருகிறான்.

கடந்த 14-ந்தேதியன்று மாணவன் மதிய உணவு சாப்பிட்டு விட்டு சிறுநீர் கழிப்பதற்காக கழிவறைக்கு சென்றான். அப்போது அங்கு வந்த ஆசிரியர் அருள் ஜீவன் மாணவனின் தோளில் கையை போட்டு நைசாக பேசி ஆய்வகத்திற்கு அழைத்து சென்றார். அங்கு அவர் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

தப்பி ஓட்டம்

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவன் வலி தாங்க முடியாமல் ஆய்வகத்தில் இருந்து கூச்சலிட்டபடி வீட்டுக்கு தப்பி ஓடி விட்டான்.

வீட்டுக்கு சென்ற பிறகு மாணவனின் அந்தரங்க உறுப்பில் வலிதாங்க முடியாமல் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. 19-ந் தேதி வலி அதிகரித்ததால் நடந்த சம்பவத்தை தந்தையிடம் அந்த மாணவன் கூறி அழுதான்.

அதைத்தொடர்ந்து மாணவனை சிகிச்சைக்காக பத்மநாபபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து 20-ந் தேதி பள்ளிக்கு மாணவனின் தந்தை சென்று தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தார். ஆனால் அவர்கள் ஆசிரியர் அருள்ஜீவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

போலீசில் புகார்

அதைத்தொடர்ந்து குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் மாணவனின் தந்தை நேற்றுமுன்தினம் புகார் செய்தார்.

அதில், கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளி இயற்பியல் ஆசிரியர் அருள்ஜீவன் எனது மகனை ஆய்வகத்திற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்து, உடம்பில் காயப்படுத்தி உள்ளார். காயமடைந்த எனது மகன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான். எனவே ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

அதைத்தொடர்ந்து குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா அன்பு ஜூலியட் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பிரேமா ஆகியோர் நேற்று பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

வழக்குப்பதிவு

அதைத்தொடர்ந்து ஆசிரியர் அருள்ஜீவன் மீது போக்சோ சட்ட பிரிவு 7, 8, 9 எப் மற்றும் 10 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் ஆசிரியர் அருள்ஜீவன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.

அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து போக்சோ வழக்கில் போலீசாரால் தேடப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

---


Next Story