தூக்குப்போட்டு ஆசிரியை தற்கொலை; 'கணவருக்கு வேறு திருமணம் செய்து வையுங்கள்' என உருக்கமான கடிதம்


தூக்குப்போட்டு ஆசிரியை தற்கொலை; கணவருக்கு வேறு திருமணம் செய்து வையுங்கள் என உருக்கமான கடிதம்
x
தினத்தந்தி 28 Jun 2023 2:30 AM IST (Updated: 28 Jun 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூரில் பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திண்டுக்கல்

வேடசந்தூர் ஆத்துமேடு இந்திரா நகரை சேர்ந்தவர் சரவணன். அவருடைய மனைவி பிரேமலதா (வயது 31). பி.ஏ., பி.எட். படித்துள்ள இவர், வேடசந்தூரில் உள்ள தனியார் டியூசன் சென்டரில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இந்த தம்பதிக்கு காவியா (10) என்ற மகளும், கோதர்ஷன் (6) என்ற மகனும் உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று மாலை வீட்டின் மாடியில் உள்ள அறையில், பிரேமலதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த வேடசந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்மணி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த அறையில் பிரேமலதா எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் ஒன்றை ேபாலீசார் கைப்பற்றினர்.

அதில், எனக்கு வாழ பிடிக்கவில்லை. என்னுடைய மகளையும், மகனையும் எனது அக்காவிடம் ஒப்படைத்து விடுங்கள். எனது கணவர் நல்லவர். அவருக்கு வேறு திருமணம் செய்து வைத்து விடுங்கள். கணவரையும், எனது மகன், மகளையும் உறவினர்கள் அனைவரும் நல்ல முறையில் கவனித்துக் கொள்ளுங்கள் என்று எழுதியிருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரேமலதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.


Next Story