தேர்வு எழுதிவிட்டு வந்த பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


தேர்வு எழுதிவிட்டு வந்த பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x

தேர்வு எழுதிவிட்டு வந்த பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

திருவெறும்பூர்:

மாணவி தற்கொலை

திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான்கோட்டை முல்லைவாசல் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் பாய்லர் ஆலை வளாகத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் இவர் நேற்று பள்ளிக்கு சென்றுவிட்டு, அறிவியல் தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முருகானந்தம் தனது மனைவியுடன் வெளியில் சென்றதாக கூறப்படுகிறது. அவர் திரும்பி வந்தபோது, வீட்டிற்குள் இருந்த மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு அவரது மகள் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இது குறித்த தகவல் அறிந்த துவாக்குடி போலீசார் அங்கு வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, மாணவியின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story