பள்ளி மாணவி 6 மாத கர்ப்பம்
வேலூரை சேர்ந்த பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய புதுக்கோட்டை வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
வேலூரை சேர்ந்த பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய புதுக்கோட்டை வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
பாலியல் பலாத்காரம்
புதுக்கோட்டை மாவட்டம் வெட்டிகாடு பகுதியை சேர்ந்தவர் பாலசந்தர் (வயது 29). இவர் வேலூர் நகரில் உள்ள உறவினருக்கு சொந்தமான ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். ஜவுளிக்கடையின் உரிமையாளர், உறவினரின் மகன் என்பதால் தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் பாலசந்தரை தங்க வைத்து சாப்பாடு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்திருந்தார். ஜவுளிக்கடை உரிமையாளரின் 12 வயது மகள் வேலூரில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஜவுளிக்கடை உரிமையாளர் மனைவியுடன் வெளியே சென்றுள்ளார். அப்போது மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அதனை பயன்படுத்தி பாலசந்தர் ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அவர் இதனை வெளியே யாரிடமும் சொல்ல கூடாது என்று கூறி உள்ளார். அதனால் இந்த சம்பவத்தை மாணவி பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை.
மாணவி கர்ப்பம்
இந்த நிலையில் மாணவி அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியை வேலூர் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் பரிசோதனைக்காக அழைத்து சென்றனர்.
அங்கு மாணவியை டாக்டர்கள் பரிசோதித்தனர். அதில், அவள் 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் உடனடியாக இதுகுறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஷாகின் தலைமையிலான போலீசார் அங்கு சென்று மாணவியிடம் விசாரித்தனர். அப்போது மாணவி, தன்னை பாலசந்தர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரேகா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து பாலசந்தரை தேடி வருகிறார்கள்.