மயங்கி விழுந்த பள்ளி மாணவி
அரளி விதையை தின்ற பள்ளி மாணவி மயங்கி விழுந்தார்.
திண்டுக்கல்
எரியோடு அருகே ராமநாதபுரம் பகுதியில் சாலையோரத்தில் நேற்று காலையில் பள்ளி மாணவி ஒருவர் மயக்க நிலையில் கிடந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சம்பவம் குறித்த புகாரின் பேரில் எரியோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் 13 வயதான அந்த பள்ளி மாணவிக்கும், அதே பள்ளியில் படிக்கும் மற்றொரு மாணவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையறிந்த பெற்றோர் அந்த மாணவியை கண்டித்ததால் மாணவி அரளிவிதையை தின்று, பள்ளிக்கு செல்லும் வழியில் மயங்கி விழுந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story