நெல்லிக்குப்பத்தில் நள்ளிரவில் ஸ்கூட்டர் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு


நெல்லிக்குப்பத்தில்    நள்ளிரவில் ஸ்கூட்டர் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு
x

நெல்லிக்குப்பத்தில் நள்ளிரவில் ஸ்கூட்டர் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் திடீர்குப்பத்தை சேர்ந்தவர் தமிழரசி (வயது 30). இவர் சம்பவத்தன்று இரவு தனக்கு சொந்தமான ஸ்கூட்டரை வீட்டுக்கு முன்பு நிறுத்திவிட்டு, தூங்க சென்றார். நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் ஸ்கூட்டருக்கு தீவைத்து விட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அலறியடித்தபடி ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பொதுமக்கள் அலறல் சத்தத்தை கேட்ட தமிழரசி வெளியே வந்து பார்த்தபோது, ஸ்கூட்டர் எரிக்கப்பட்டது கண்டு பதறியதுடன், இதுபற்றி நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசியின் ஸ்கூட்டரை தீவைத்து எரித்துச் சென்ற மர்மநபர்கள் யார்? முன்விரோதம் காரணமாக யாரேனும் தீவைத்து எரித்தார்களா? என விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது.


Next Story