வாலிபருக்கு அரிவாள் வெட்டு; 2 பேர் கைது
வாலிபரை அரிவாள் வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி திருவானைக்காவல் தாகூர்தெருவை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 23). இவர் நேற்றுமுன்தினம் இரவு தனது நண்பர் முத்துவுடன் உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அதேபகுதியில் உள்ள தண்ணீர் தொட்டி அருகில் வந்தபோது, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் சிவராஜின் மோட்டார் சைக்கிள் மீது உரசுவது போல் வந்தனர். அவர்களை சிவராஜும், அவரது நண்பரும் கண்டித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், 2 பேரையும் திட்டி மறைத்து வைத்திருந்த அரிவாளால் சிவராஜை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருவானைக்காவலை சேர்ந்த சந்தோஷ் (19), அர்ஜூன் (20) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.