வாலிபருக்கு அரிவாள் வெட்டு


தூத்துக்குடியில் வாலிபரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி புனித மரியன்னை காலனி பகுதியை சேர்ந்த தங்கராஜ் மகன் முத்துகுமார் (வயது 35). இவருக்கும், தொழிலாளியான அவரது உறவினரான தூத்துக்குடி புதிய உப்பளம் காலனி பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் யுவராஜ் (42) என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் முத்துக்குமார் வீட்டிற்கு யுவராஜ் மது போதையில் சென்று தகராறு செய்துள்ளார். அங்கிருந்து அவர் திருச்செந்தூர் ரோட்டிலுள்ள புதிய உப்பளம் காலனிக்கு சென்றார். அங்குள்ள முத்துகுமாரின் சகோதரர் செல்வத்திடம்(38) தகராறு செய்துள்ளார். திடீரென்று அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டாராம்.

இது குறித்த தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அய்யப்பன் வழக்குபதிவு செய்து யுவராஜை கைது செய்தார்.


Next Story