வாலிபரை அரிவாளால் வெட்டிய 5 பேர் கைது


வாலிபரை அரிவாளால் வெட்டிய 5 பேர் கைது
x

வாலிபரை அரிவாளால் வெட்டிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி-நாரணாபுரம் ரோட்டில் உள்ள போஸ் காலனியை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் செல்வம் (வயது 22). டிரைவர். இந்தநிலையில் சம்பவத்தன்று பாரதிநகர் பகுதியில் செல்வம் சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த மணிகண்டன் (22), ரூபன் என்கிற அஜித்குமார் (25), பாலகணேஷ் என்கிற டோனி (21), சதிஷ்குமார் (20), ஸ்டீபன்ராஜ் (20) ஆகியோர் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த செல்வத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், அஜித்குமார், டோனி, சதிஷ்குமார், ஸ்டீபன்ராஜ் ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Next Story