வாலிபருக்கு அரிவாள் வெட்டு


வாலிபருக்கு அரிவாள் வெட்டு
x

வாலிபரை அரிவாளால் வெட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

சிவகாசி,

திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டி ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் வீரசோலையப்பன் (வயது 31). இவர் சம்பவத்தன்று பெரியார்காலனியில் உள்ள ஒரு கடையின் அருகில் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சேகர் (26) என்பவர் வீரசோலையப்பனிடம் கஞ்சா கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மறுநாள் காலையில் வீரசோலையப்பன் வீட்டிற்கு வந்த சேகர், பால் பாண்டி (22), ராஜ்குமார் (29) ஆகியோர் வீரசோலையப்பனிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்டிவிட்டு, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வீரசோலையப்பன் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சேகர், பால்பாண்டி, ராஜ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.


Next Story