தொழில் போட்டியில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு


தொழில் போட்டியில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு
x

மன்னார்குடி அருகே தொழில் போட்டியில் வாலிபரை அரிவாளால் வெட்டிய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்

மன்னார்குடி:

மன்னார்குடி அருகே தொழில் போட்டியில் வாலிபரை அரிவாளால் வெட்டிய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

தொழில் போட்டி

மன்னார்குடியை அடுத்த அசேஷம் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் வினோத் (வயது30). இவர் அசேஷம் மெயின் ரோட்டில் தண்ணீர் கேன் விற்பனை மற்றும் செல்போன் ரீசார்ஜ் செய்யும் கடை நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு அருகில் உள்ளிக்கோட்டையை சேர்ந்த தமிழழகன் (51) என்பவர் தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வருகிறார். தொழில் போட்டி காரணமாக வினோத்திடம், தமிழழகன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அரிவாள் வெட்டு

இந்த நிலையில் நேற்று காலை வினோத் தனது கடையை திறந்து பொருட்களை அடுக்கி வைத்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தமிழழகன், வினோத்திடம் வெளியூரில் இருந்து இங்கு வந்து பணம் சம்பாதிக்கிறாயா? என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார் இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த தமிழழகன் தனது கடையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வந்து வினோத்தை வெட்டினார்.

கைது

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவரை அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வினோத்தின் மனைவி இலக்கியா மன்னார்குடி நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழழகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story