மேலும் 5 பார்களுக்கு 'சீல்' வைப்பு
மேலும் 5 பார்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
புதுக்கோட்டை
தஞ்சாவூரில் மதுபானம் குடித்த 2 பேர் பலி சம்பவம் எதிரொலியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோதமாக பார்கள் செயல்படுகிறதா? என டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த சோதனையில் சட்டவிரோதமாக செயல்பட்ட 6 பார்களுக்கு சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து மேலும் 5 பாா்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இதுவரை மொத்தம் 11 பார்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 140-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் 63 இடங்களில் மட்டும் பார்கள் அனுமதி பெற்று இயங்கி வருகிறது. மற்றவை உரிய அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக விற்பனை நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து அதிகாரிகள் இன்றும் (புதன்கிழமை) மாவட்டத்தில் 4 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொள்ள உள்ளனர்.
Related Tags :
Next Story