மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு


மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
x
நாமக்கல்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு, முதற்கட்டமாக 611 விண்ணப்பப்பதிவு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு கடந்த 24-ந் தேதி முதல் தொடர்ந்து விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் குறைவான எண்ணிக்கையில் குடும்ப அட்டைகள் உள்ள முகாம்களில் விண்ணப்பப்பதிவு செய்யும் பணிகள் முடிவுறுவதால் அவைகள் மூடப்பட உள்ளது. அத்தகைய முகாம்களில் பல்வேறு காரணங்களால் பதிவு செய்ய தவறிய விண்ணப்பதாரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் ஆகஸ்டு மாதம் 3-ந் தேதி (வியாழக்கிழமை) மற்றும் 4-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் ஏற்கனவே செயல்பட்டவாறு அனைத்து முகாம்களும் செயல்படும்.

எனவே இவ்வாய்ப்பினை பயன்படுத்தி விடுபட்ட விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை தொடர்புடைய முகாம்களில் பதிவு செய்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story