ரூ.4 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டும் பணிஉயர் அதிகாரி திடீர் ஆய்வு


ரூ.4 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டும் பணிஉயர் அதிகாரி திடீர் ஆய்வு
x

போளூரில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் cயை உயர் அதிகாரி திடீர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

போளூர்

போளூரில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டும் பணியை உயர் அதிகாரி திடீர் ஆய்வு செய்தார்.

போளூர் பழைய பஸ் நிலையம் அருகில் இருந்த வணிக வளாகத்தில் காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் செயல்பட்டு வந்தன. கட்டிடங்கள் பழுதடைந்ததால், சில ஆண்டுகளுக்கு முன் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

அந்த இடத்தில் புதிய வணிக வளாகம் கட்ட வேண்டும் என்று அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. சட்டசபையில் வலியுறுத்தி பேசினார்.

அதன்படி ரூ.4.08 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய வணிக வளாகம் கட்டுவதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இங்கு காய்கறி கடைகள், இறைச்சி கடைகள், மளிகை கடைகள் என சுமார் 86 கடைகள் நவீன முறையில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

கட்டுமான பணிக்கு கடந்த மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை சென்னையில் உள்ள பேரூராட்சிகளின் கமிஷனர் அலுவலக செயற்பொறியாளர் ப.வைத்தியலிங்கம் ஆய்வு மேற்கொண்டார். திட்ட மதிப்பின் மதிப்பீட்டின்படி ஆரம்ப கட்ட பணிகள் முறையாக தொடங்கப்பட்டுள்ளதா? தரமான கட்டுமான பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து அவர் ஆய்வு செய்தார்.

அப்போது உதவி செயற்பொறியாளர் அம்சா, பேரூராட்சி தலைவர் ராணி சண்முகம், துணைத் தலைவர் எவரெஸ்ட் சாந்தி நடராஜன், செயல் அலுவலர் முகமது ரிஸ்வான், இளநிலை பொறியாளர் முரளி, தலைமை எழுத்தர் முகமது ஈசாக், துப்புரவு ஆய்வாளர் ரவிக்குமார், மன்ற கவுன்சிலர் அமுதா தனசேகரன் ஒப்பந்ததாரர் சையத் அப்ரோஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story