பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டா்


பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டா்
x
தினத்தந்தி 19 July 2023 1:00 AM IST (Updated: 19 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

நிலக்கோட்டை பகுதியில் பா.ஜ.க. சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்

நிலக்கோட்டை பேரூராட்சிக்கு சொந்தமான பூ மார்க்கெட் மற்றும் அணைப்பட்டி சாலையில் உள்ள வணிக வளாகத்தில் 200-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏலம் விடப்பட்டது. இதில் பூ மார்க்கெட்டில் உள்ள 50 கடைகளுக்கு ஏலம் விடப்பட்ட தேதி முடிவடைந்தது. அந்த கடைகளை நடத்தி வருபவர்களுக்கே காலநீட்டிப்பு செய்து மீண்டும் வழங்க இருப்பதாக தகவல் வெளியானது.

இந்தநிலையில் பா.ஜ.க. சார்பில் நிலக்கோட்டை பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், பூ மார்க்கெட்டில் ஏலம் முடிந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்த கடைகளுக்கு மீண்டும் ஏலம் விட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Related Tags :
Next Story