பொதுவினியோக திட்டத்துக்கு தனித்துறை உருவாக்க வேண்டும்


பொதுவினியோக திட்டத்துக்கு தனித்துறை உருவாக்க வேண்டும்
x
தினத்தந்தி 10 Sept 2023 12:30 AM IST (Updated: 10 Sept 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

பொதுவினியோக திட்டத்துக்கு தனித்துறை உருவாக்க வேண்டும் என ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் திருமருகலில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பழனிவேல் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் பிரகாஷ் தீர்மானங்களை விளக்கி பேசினார். பொதுவினியோக திட்டத்துக்கு தனித்துறை உருவாக்க வேண்டும். நாகை மாவட்டத்தில் விற்பனை முனைய கருவியை கூடுதலாக இருப்பு வைத்து தடங்கல் இன்றி பொருட்கள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் நிர்வாகிகள் நீலமேகம், காமராஜ், தங்கராசு, பாண்டியன், பாலதண்டாயுதம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இணை செயலாளர் குமார் நன்றி கூறினார்.


Next Story