முறைகேடுகளை தவிர்க்க தனிப்பிரிவு போலீசாரின் கண்காணிப்பு தேவை
மாவட்டத்தில் போலீஸ் நிலைய செயல்பாடுகளில் முறைகேடுகளை தவிர்க்க தனிப்பிரிவு போலீசார் முறையான கண்காணிப்பு பணியை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் நிர்வாகம் உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் போலீஸ் நிலைய செயல்பாடுகளில் முறைகேடுகளை தவிர்க்க தனிப்பிரிவு போலீசார் முறையான கண்காணிப்பு பணியை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் நிர்வாகம் உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
போலீஸ் நிலையங்கள்
மாவட்டம் முழுவதும் 54 போலீஸ்நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் நிலையஅதிகாரியாக இன்ஸ்பெக்டர் பணி அமர்த்தப்பட்டுள்ள நிலையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட போலீஸ்நிலைய விசாரணை எல்லையில் சட்ட ஒழுங்கு பிரச்சினை, குற்றவியல் சம்பவங்கள் ஆகியவற்றை தடுக்க போலீஸ் நிலைய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அரசின் உத்தரவாகும். மேலும் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்களை முறையாக விசாரித்து அவர்களது புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் அவர்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
முறைகேடுகள்
ஆனால் பல சந்தர்ப்பங்களில் போலீஸ் நிலையங்களில் புகார் மனுக்களை பெறாமல் கட்டப்பஞ்சாயத்து மேற்கொள்ளும் நடைமுறை உள்ளதாக புகார் கூறப்படுகிறது.
புகார் மனுதாரரிடம் ஆதாயம் எதிர்பார்த்து விசாரணையை தாமதிக்கும் நிலையும், குறிப்பிட்ட நிகழ்வுகள் தொடர்பாக அனுமதி கேட்டு மனுக்கள் கொடுத்தாலும் அதில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்காமல் ஆதாயம் எதிர்பார்த்து காலம் தாழ்த்தும்நிலை உள்ளதாகவும் புகார் கூறப்படுகிறது. மாவட்டத்தில் ஒரு போலீஸ்நிலையத்தில் திருவிழாவின்போது நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்க பணம் வாங்கியதாக போலீஸ் நிலைய அதிகாரி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வலியுறுத்தல்
எனவே மாவட்ட போலீஸ் நிர்வாகம் போலீஸ்நிலைய செயல்பாடுகளை முறையாக கண்காணிக்க வேண்டும் என்பதற்காக சமீபத்தில் மாவட்டம் முழுவதும் தனிப்பிரிவு போலீசாரை பணியிட மாற்றம் செய்து புதிதாக பல்வேறு இடங்களில் போலீசார் தனி பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே போலீஸ்நிலைய செயல்பாடுகளில் முறைகேடுகளை தவிர்க்க தனிப்பிரிவு போலீசார் முறையான கண்காணிப்பு பணியை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் நிர்வாகம் உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.