மீன் பிரியர்களுக்கு ஒரு ஷாக்..! - தொடங்க போகிறது மீன்பிடி தடைக்காலம்


மீன் பிரியர்களுக்கு ஒரு ஷாக்..! - தொடங்க போகிறது மீன்பிடி தடைக்காலம்
x

ஆண்டுதோறும் 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது.

கடலூர்,

மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு, ஆண்டுதோறும் 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. இதன்படி, இந்த ஆண்டுக்கான தடைக்காலம் வரும் 15ம் தேதி தொடங்கி, ஜுன் 14-ம் தேதி வரை அமல்படுத்தப்படுகிறது.

இதையொட்டி கடலூர் மாவட்ட மீன்வளத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தடைக்காலத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள், துறைமுகம் மற்றும் தங்குதளத்திலிருந்து கடலில் மீன்பிடிக்க செல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகள், ஆந்திர கடல்பகுதிக்கு கண்டிப்பாக செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலுக்கு சென்ற விசைப்படகுகள் நாளை நள்ளிரவு 12 மணிக்குள் கட்டாயம் கரை திரும்ப வேண்டும் என்றும், இல்லாவிட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்துள்ளது.



Next Story