இல்லம் தேடி கல்வி மாணவர்களின் கற்பனை திறனை ஊக்குவிக்க குறும்பட நிகழ்ச்சி


இல்லம் தேடி கல்வி மாணவர்களின் கற்பனை திறனை ஊக்குவிக்க குறும்பட நிகழ்ச்சி
x

இல்லம் தேடி கல்வி மாணவர்களின் கற்பனை திறனை ஊக்குவிக்க குறும்பட நிகழ்ச்சி கல்வித்துறை ஏற்பாடு.

சென்னை,

இல்லம் தேடி கல்வி மையங்கள் கடந்த ஓராண்டாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இதில் கற்கும் மாணவர்களின் கற்பனை, படைப்பாற்றல், சிந்தனைத் திறன்களை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்வுகள் நடத்த கல்வித்துறை திட்டமிட்டு இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக இல்லம் தேடி கல்வி மையங்களில் 'சிட்டுக்களின் குறும்படம்' என்ற நிகழ்வு நடத்தப்பட உள்ளது.

அதன்படி, சுற்றுச்சூழல், எனது ஊர், குழந்தைகள் பாதுகாப்பு, எனக்கு பிடித்த..., தன் சுத்தம் என்ற 5 தலைப்புகளில் மாணவர்கள் 3 நிமிட குறும்படங்களை தயார் செய்யலாம். இதற்கான கதை களத்தை மாணவர்களே தயார்செய்திருக்க வேண்டும். கதைக்களத்துக்கான காட்சிகளை செல்போன் உதவியுடன் படம்பிடித்து அதை தன்னார்வலர்கள் உதவியுடன், வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளர்களுக்கு வருகிற 24-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். ஒரு மையம் ஒரு குறும்படத்தை மட்டுமே தயார் செய்து அனுப்ப வேண்டும்.

வட்டார வள மைய அதிகாரிகள் கதையமைப்பு, ஒளிப்பதிவு, கதாபாத்திரம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு 10 மதிப்பெண்களுக்கு கணக்கிட்டு, வட்டார அளவில் 5 தலைப்புகளின் கீழ் 5 சிறந்த குறும்படங்களை மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு 28-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் 5 தலைப்புகளில் 5 சிறந்த குறும்படங்களை மாவட்ட அளவில் தேர்வு செய்து, மாநில அலுவலகத்துக்கு அடுத்த மாதம் (மார்ச்) 3-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது.


Next Story