ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி


ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி
x
தினத்தந்தி 6 Jun 2023 12:15 AM IST (Updated: 6 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சமூக நல்லிணக்கப் பேரவை சார்பில் திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் முன்பு மாவட்ட அமைப்பாளர் தமிழ்பரிதி தலைமையில் மெழுகுவர்த்தி ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், கருத்தியல் பரப்பு மாநில துணை செயலாளர் தமிழ்க்குட்டி, நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ராஜ்குமார், திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி செயலாளர் வெற்றிவேந்தேன், உடன்குடி ஒன்றிய பொருளாளர் டேவிட் ஜான்வளவன், திருச்செந்தூர் நகர செயலாளர் உதயா, செய்தி தொடர்பு மையம் மாவட்ட அமைப்பாளர் வேம்படிமுத்து, விடுதலை கலை இலக்கிய பேரவை மாவட்ட அமைப்பாளர் சிறுத்தை சிவா, முற்போக்கு மாணவர் கழக மாவட்ட துணை அமைப்பாளர் பாபா சாகிப் அருண், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர பொறுப்பாளர் தோப்பூர் சங்கர், சமூக நல்லிணக்கப் பேரவை திருச்செந்தூர் ஒன்றிய துணை அமைப்பாளர்கள் ராம்குமார், ரூபன், டாக்டர் அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுனர் சங்கத் தலைவர் இசக்கிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story