ஒற்றை யானை அட்டகாசம்
கடையம் அருகே தோட்டத்தில் ஒற்றை யானை புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது.
தென்காசி
கடையம்:
கடையம் அருகே வேட்ராங்குளம் பகுதியில் ஆரியங்காவை சேர்ந்த முருகேசன் மற்றும் ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு தென்னை, வாழை உள்ளிட்ட பல மரங்கள் உள்ளன. இந்த நிலையில் நேற்று காலை தோட்டத்திற்கு ராமகிருஷ்ணன் தண்ணீர் பாய்ச்ச சென்றார். அப்போது தோட்டத்தில் ஒற்றை யானை புகுந்து அங்கிருந்த தென்னை மற்றும் வாழை மரங்களை பிடுங்கியும், பலா காய்களை பிடுங்கியும் அட்டகாசத்தில் ஈடுபட்டன. இதனை கண்ட அவர் பதறியடித்து ஓடினார். தகவல் அறிந்ததும் கடையம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story