கொடைக்கானல் மலைப்பாதையில் உலா வந்த ஒற்றை யானை


கொடைக்கானல் மலைப்பாதையில் உலா வந்த ஒற்றை யானை
x
தினத்தந்தி 6 Jun 2023 12:30 AM IST (Updated: 6 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

பழனி வரதமாநதி அணை அருகே கொடைக்கானல் மலைப்பாதையில் ஒற்றை யானை உலா வந்தது. இதனால் இரவு நேரத்தில் யாரும் வெளியே செல்லக்கூடாது என்று வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

திண்டுக்கல்

ஒற்றையானை உலா

பழனி வரதமாநதி அணையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் காட்டுயானை, காட்டெருமை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இவை உணவு, தண்ணீருக்காக அடிக்கடி அணையின் நீர்ப்பிடிப்பு மற்றும் அருகிலுள்ள தோட்ட பகுதிக்கு வந்து செல்வது வழக்கம். அந்த நேரங்களில் விளைபயிர்களை சேதப்படுத்தி செல்கிறது.

பழனி பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலான மழை பெய்வதால் விளைநிலங்களுக்குள் வனவிலங்குகள் வருவது குறைந்தது. இந்நிலையில் பழனி வரதமாநதி அணை பகுதியில் இரவு நேரத்தில் ஒற்றை யானை நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி விவசாயிகள், மக்கள் கூறி வந்தனர். இதையடுத்து வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து செல்கின்றனர்.

வனத்துறை தடை

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வரதமாநதி அணை அருகே கொடைக்கானல் மலைப்பாதையில் ஒற்றையானை உலா வந்தது. இதை அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஒற்றை யானை நடமாட்டம் குறித்து வனத்துறையினர் கூறுகையில், இந்த ஒற்றை யானையால் பெரிய அளவில் சேதம் ஏதுமில்லை. எனினும் யானை நடமாட்டத்தால் அணை பகுதி தோட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் யானை நடமாட்டம் இருந்தால் சத்தம் எழுப்பியும், பட்டாசு வெடித்து அதை விரட்டுவதும் கூடாது. இதனால் அது தொந்தரவுக்கு உள்ளாகி சேதம் செய்ய நேரிடும். யானை நடமாட்டம் இருந்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றனர்.


Next Story