ஜவ்வாது மலையில் ரோட்டை மறித்து நின்ற ஒற்றை தந்த யானையால் பரபரப்பு
ஜவ்வாது மலையில் ரோட்டை மறித்து நின்ற ஒற்றை தந்த யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை
போளூர்
ஜவ்வாது மலையில் ரோட்டை மறித்து நின்ற ஒற்றை தந்த யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜவ்வாதுமலையில் இருந்து ஆலங்காயம் செல்லும் வழியில் ஒற்றைத் தந்த யானை நேற்று முன் தினம் காலையில் திடீரென்று ரோட்டை மறித்து நின்றது. இதனால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் அரை மணி நேரம் ஒரே இடத்தில் யானை நின்றதால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து ஜவ்வாது மலையில் உள்ள வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வருவதற்குள் யானை காட்டுக்குள் சென்று விட்டது. யானை காட்டுக்குள் செல்லும் வரை பொதுமக்கள் அச்சத்துடன் இருந்தனர்.
Related Tags :
Next Story