சாலையின் நடுவே நின்ற ஒற்றை தந்த காட்டு யானை


சாலையின் நடுவே நின்ற ஒற்றை தந்த காட்டு யானை
x

ஆலங்காயம் அருகே ஒற்றைதந்த காட்டு யனை ஒன்று சாலையின் நடுவே நின்றதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.

திருப்பத்தூர்

காட்டு யானை

திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இடையில் உள்ள ஜவ்வாது மலை, காவலூர் பகுதியில் உள்ள அருணாச்சலம் கொட்டாய், நாயக்கனூர், பீம்குளம் நெசக்குட்டை பகுதிகளில் கடந்த 5 நாட்களாக ஒற்றை தந்த யானை ஒன்று சுற்றித் திரிகிறது.

இந்த யானை தண்ணீரைத் தேடி ஊருக்குள் வருவதால் பொதுமக்கள் அதனை தீப்பந்தங்கள் காட்டியும், பட்டாசுகள் வெடித்தும் துரத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் ஆலங்காயம்- காவலூர் சாலையில் நொசக்குட்டை என்ற இடத்தில் சாலை ஓரத்தில் உள்ள மரங்களுக்கு இடையே பயங்கர் சத்தத்துடன் பிளிறிக்கொண்டு இருந்ததை அவ்வழியே சென்ற பொதுமக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சாலையின் நடுவே

சிறிது நேரம் கழித்து அந்த யானை மெதுவாக சாலையின் நடுவே வந்து நின்று கொண்டது. இதனால் ஆலங்காயம் - காவலூர் செல்லும் வழியில் வாகனங்கள் எதுவும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மலைப்பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சிறிது நேரத்தில் பொதுமக்களே மீண்டும் சிரமப்பட்டு சாலை ஓரம் உள்ள காட்டு பகுதிக்கு யானையை விரட்டி விட்டனர்.

முன்னதாக அந்த யானை தனது துதிக் கையால் இடது காலை தொட்டு தொட்டு பார்த்தது. இந்த சம்பவத்தை சிலர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவவிட்டனர். அதை பார்த்தபோது யானைக்கு இடது காலில் காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட வனத்துறையினருக்கும், ஆலங்காயம் வனத்துறையினருக்கும் தகவல் அளித்து காயம் அடைந்துள்ள யானைக்கு சிகிச்சை அளிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story