குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம்


குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம்
x

திருவண்ணாமலை அருகே குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு

திருவண்ணாமலை ஒன்றியத்தில் உள்ள தேவனந்தல் ஊராட்சியில் புனல்காடு அருகில் உள்ள மலையை ஒட்டிய 5 ஏக்கர் இடத்தில் குப்பை கிடங்கு அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இதற்கு அருகில் உள்ள புனல்காடு, கலர்கொட்டாய், ஆடையூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக விவசாயிகள் சங்கத்தினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 8-ந்தேதியன்று குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த இடத்தில் குப்பை கொட்டும் பணி நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டு உள்ள இடத்தை சுற்றி சுற்றுசுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

காத்திருப்பு போராட்டம்

இந்த பணியை நிறுத்தக்கோரி மீண்டும் நேற்று முன்தினம் முதல் புனல்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குப்பை கிடங்கு அமைக்கும் இடத்தின் அருகில் உள்ள மரத்தடியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அங்கேயே கஞ்சி காய்ச்சி 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குப்பை கிடங்கு அமைக்கும் பணியை நிறுத்தும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story