புதூர் காந்திபுரம் ரணகாளியம்மன் கோவில் 36-வது ஆண்டு பங்குனி உற்சவம் - 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
புதூர் காந்திபுரம் ரணகாளியம்மன் கோவில் 36-வது ஆண்டு பங்குனி உற்சவத்தையொட்டி 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
மதுரை கோ.புதூர் காந்திபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீரணகாளியம்மன் கோவில் 36-ம் ஆண்டு பங்குனி உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற 14-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) காலை 5 மணி முதல் 6.30 மணிக்குள் கணபதி ஹோமம், பால் அபிஷேகம், காப்பு கட்டுதல், 7.45 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. இதனையடுத்து 17-ந் தேதி(வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி அளவில் திருவிளக்கு பூஜையும், 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் சிறப்பு அன்னதானம் நடைபெறும், 21-ந் தேதி காலை 7 மணிக்கு மேல் ரிசர்வ் லையன் மாரியம்மன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வருதல், மதியம் 12 மணியளவில் அபிஷேக ஆராதனையும், சிறப்பு அலங்காரமும் நடைபெறும். மாலை 4.30 மணியளவில் வைகை ஆற்றில் இருந்து அம்மனுக்கு சக்தி கரகம், அக்னி சட்டி, முளைப்பாரி, வேல்குத்துதல், தேர் பவனி, இரவு கோவில் முன்பு பூக்குழி இறங்குதல் போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெறும். 14-ந்தேதி மாலை 7 மணி அளவில் கும்மிபாட்டு நிகழ்ச்சி நடைபெறும். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கவுரவ தலைவர்கள் ராசு, மலைச்சாமி,விழா கமிட்டி தலைவர் செல்வம், செயலாளர் சபரி பாண்டியன், பொருளாளர் செல்ல பாண்டி ஆகியோர் செய்து வருகின்றனர்.