கோட்டை மைதானத்தில் ஊர்ந்து சென்ற பாம்பு
ஆரணியில்கோட்டை மைதானத்தில் ஊர்ந்து சென்ற பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆரணி
ஆரணி நகராட்சியில் உள்ள கோட்டை மைதானத்தில் காலை மற்றும் மாலையில் ஏராளமான பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது கோட்டை மைதானம் சுற்றிலும் அடர்ந்த காடு போல செடிகள் வளர்ந்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை சுமார் 7 மணி அளவில் பொதுமக்கள் அதிகம் நடமாடக்கூடிய நேரத்தில் சுமார் 5 அடி நீளம் உள்ள நாகப்பாம்பு நடைபயிற்சி செல்லும் பாதையில் உள்ள பள்ளத்தில் ஊர்ந்து சென்றது.
இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் கோட்டை மைதானத்தில் உள்ள செடிகளுக்கு இடையில் பாம்பு சென்றுவிட்டது.
பின்னர் தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி பாம்பை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதனை வனத்துறையினர் காப்புக்காட்டில் விட்டனர்.
நகராட்சி நிர்வாகம், மாவட்ட விளையாட்டு துறை நிர்வாகம் இணைந்து கோட்டை மைதானம் சுற்றிலும் தூய்மைப்படுத்தி நடைபயிற்சி மேற்கொள்பவர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.