பழனியில் பள்ளிக்குள் புகுந்த பாம்பு
பழனியில் பள்ளிக்குள் புகுந்த பாம்பை பார்த்த மாணவ-மாணவிகள் அலறியடித்து கொண்டு பள்ளியை விட்டு வெளியே ஓடினர்.
திண்டுக்கல்
பழனி நகராட்சி கடைவீதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று மதியம் 1 மணி அளவில் மதிய உணவு இடைவேளையின்போது வழக்கம்போல் மாணவ-மாணவிகள் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது பள்ளி வளாகத்துக்குள் பாம்பு ஒன்று ஊர்ந்து வந்தது. இதனை பார்த்த மாணவ-மாணவிகள் அலறியடித்து கொண்டு பள்ளியை விட்டு வெளியே ஓடினர். இதற்கிடையே அந்த பாம்பு பள்ளிக்கூடத்தின் ஒரு அறைக்குள் சென்று பதுங்கியது.
இதுகுறித்து பழனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படைவீரர்கள், பள்ளிக்குள் புகுந்த 4 அடி நீள பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு வனப்பகுதியில் கொண்டுபோய் விடப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story