பேக்கரி கடைக்குள் புகுந்த பாம்பு


பேக்கரி கடைக்குள் புகுந்த பாம்பு
x

உறையூரில் பேக்கரி கடைக்குள் புகுந்த பாம்பு அடித்து கொல்லப்பட்டது.

திருச்சி

திருச்சி உறையூர் போலீஸ் குடியிருப்பு பகுதியில் கடந்த ஒரு வாரமாக ஒரு பாம்பு உலா வந்து கொண்டிருந்தது. இந்தநிலையில் நேற்று காலை அந்த பாம்பு விக்டோரியா சாலையில் ஊர்ந்து வந்து அங்குள்ள ஒரு பேக்கரி கடைக்குள் செல்ல முயன்றது. அந்த வழியாக சாலையில் வந்தவர்கள் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். உடனே, அங்கிருந்த 2 வாலிபர்கள் அதை லாவகமாக வெளியே தள்ளிவிட்டனர். பின்னர், கம்பு, கற்களை கொண்டு அதை அடித்து கொன்று சாக்கடையில் வீசினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.


Next Story