விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில்அரசு டவுன் பஸ்சுக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்புபயணிகள் அலறியடித்து ஓட்டம்


விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில்அரசு டவுன் பஸ்சுக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்புபயணிகள் அலறியடித்து ஓட்டம்
x
தினத்தந்தி 27 July 2023 12:15 AM IST (Updated: 27 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசு டவுன் பஸ்சுக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று மாலை அனந்தபுரத்துக்கு ஒரு டவுன் பஸ் புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணிகளும் ஏறி அமர்ந்திருந்தனர். அப்போது டிரைவர் இருக்கையின் மேல் பகுதியில் 4 அடி நீள பச்சை பாம்பு ஒன்று இருந்தது. இதைப்பார்த்ததும் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அலறியடித்துக்கொண்டு கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் இதுகுறித்து விழுப்புரம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் சிவசங்கரன் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் பழைய பஸ் நிலையத்திற்கு விரைந்து வந்து பஸ்சுக்குள் புகுந்த பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story