தூய்மை பணியாளர் வீட்டுக்குள் புகுந்த பாம்பு


தூய்மை பணியாளர் வீட்டுக்குள் புகுந்த பாம்பு
x

வத்தலக்குண்டுவில், துப்புரவு பணியாளர் வீட்டுக்குள் பாம்பு புகுந்தது.

திண்டுக்கல்

வத்தலக்குண்டுவில், பெரியகுளம் சாலையில் மஞ்சள் ஆற்று பாலம் அருகே வசிப்பவர் அமாவாசை. அவருடைய மனைவி மாரியம்மாள். இவர், தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இவரது வீட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மாரியம்மாள், வத்தலக்குண்டு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி ஜோசப் தலைமையிலான வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் ½ மணி நேரம் போராடி வீட்டுக்குள் பதுங்கி இருந்த சுமார் 7 அடி நீள சாரைப்பாம்பை பிடித்தனர். இதையடுத்து அந்த பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.


Next Story