டிரைவர் வீட்டுக்குள் புகுந்த பாம்பு


டிரைவர் வீட்டுக்குள் புகுந்த பாம்பு
x
தினத்தந்தி 20 Jan 2023 12:15 AM IST (Updated: 20 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நத்தம் அருகே டிரைவர் வீட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்தது.

திண்டுக்கல்

நத்தம் அருகே உள்ள அண்ணாநகரை சேர்ந்தவர் முகமது கனி (வயது 45). கார் டிரைவர். இவரது வீட்டில் நேற்று பாம்பு ஒன்று புகுந்தது. இதனை கண்ட முகமதுகனி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து நத்தம் தீயணைப்பு நிலையத்துக்கு அவர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் திருக்கோல்நாதர் மேற்பார்வையில் சிறப்பு அலுவலர் அம்சராசன் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். பின்னர் வீட்டில் பதுங்கி இருந்த சுமார் 7 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்றை தீயணைப்பு படையினர் பிடித்தனர்.

இதேபோல் செல்லம் புதூர் பகுதியில் சுப்பையா என்பவரது வீட்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்தது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் அங்கு சென்று வீட்டிற்குள் பதுங்கி இருந்த 5 அடி நீளமுள்ள சாரை பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த 2 பாம்புகளும் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அந்த பாம்புகளை வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.


Next Story