விவசாயி வீட்டுக்குள் புகுந்த பாம்பு


விவசாயி வீட்டுக்குள் புகுந்த பாம்பு
x

பழனியில் விவசாயி வீட்டுக்குள் புகுந்து பாம்பை தீயணைப்பு படையினர் பிடித்தனர்.

திண்டுக்கல்

பழனி தட்டான்குளம் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி. விவசாயி. நேற்று இவரது வீட்டு வளாகத்துக்குள் 5 அடி நீள சாரைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதைக்கண்டதும் கருப்புசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து பழனி தீயணைப்பு நிலையத்துக்கு கருப்புசாமி தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் நிலைய அலுவலர் பாஸ்கரன் தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் வீட்டில் பதுங்கி இருந்த சாரைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அது, அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது.


Next Story