கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்த பாம்பு நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்
கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்குள் பாம்பு புகுந்ததால் நோயாளிகள் அலறியடித்து ஓடினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்
கடலூர் மஞ்சக்குப்பத்தில் அரசு தலைமை ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரி வளாகத்தில் சித்த மருத்துவ பிரிவும் உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை சித்த மருத்துவ பிரிவுக்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆஸ்பத்திரிக்கு வந்திருந்த நோயாளிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். உடனே பணியில் இருந்த டாக்டர்கள், பாம்பு பிடி வீரர் செல்லாவுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் அவர் விரைந்து வந்து, பாம்பை லாவகமாக பிடித்துச் சென்றார். பிடிபட்டது 4 அடி நீளம் உடைய நல்ல பாம்பு என்பது தெரியவந்தது. அரசு ஆஸ்பத்திரிக்குள் பாம்பு புகுந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story