வீட்டுக்குள் புகுந்த பாம்பு
நன்னிலம் அருகே வீட்டுக்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்
திருவாரூர்
நன்னிலம்:
நன்னிலம் அருகே உள்ள மூங்கில்குடி கிராமத்தை சேர்ந்தவர் சத்திய பாலு. வெளியூர் சென்று இருந்த இவர் நேற்று இரவு 7 மணி அளவில் வீட்டுக்கு வந்து வாசல் கதவை திறந்தாா். அப்போது கதவின் மேல்இருந்த ஒரு நாகப்பாம்பு கீேழ விழுந்தது.
இதைக்கண்டு அலறிய சத்தியபாலு நன்னிலம் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் அதற்குள் பாம்பு வீட்டுக்குள் சென்று மறைந்து கொண்டது. இந்தநிலையில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பு பிடிக்கும் கருவியுடன் வந்து நாகப் பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னா் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அங்கு மறைந்திருந்த 5 அடி நீள நாகப்பாம்பை பிடித்து ஒரு பையில் போட்டு எடுத்து சென்று அருகே உள்ள வனப்பகுதியில் விட்டனர்.
Related Tags :
Next Story