மின்பொறியாளர் அலுவலகத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு


மின்பொறியாளர் அலுவலகத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 July 2023 12:15 AM IST (Updated: 19 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாகை மின்பொறியாளர் அலுவலகத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

நாகப்பட்டினம்


நாகை நெய்தல் நகரில் உதவி மின் பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் நேற்று வழக்கம்போல பணியாளர்களும், மின் கட்டணம் செலுத்துவதற்காக பொதுமக்களும் இருந்தனர். அப்போது அங்குள்ள மின்மீட்டர் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த அறையில் திடீரென பாம்பு புகுந்தது. பாம்பை கண்டதும் அலுவலகத்தில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

இது குறித்து நாகை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வீரர்கள் சுமார் ½ மணி நேரத்துக்கும்மேல் போராடி 5 அடி நீளம் கொண்ட சாரை பாம்பை பிடித்தனர். இதையடுத்து அந்த பாம்பை ஒதுக்குப்புறமாக உள்ள காட்டுப்பகுதியில் வனத்துறையினர் விட்டனர். நாகை மின் பொறியாளர் அலுவலகத்தில் பாம்பு புகுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story