போலீஸ்காரர் வீட்டுக்குள் புகுந்த பாம்பு


போலீஸ்காரர் வீட்டுக்குள் புகுந்த பாம்பு
x
தினத்தந்தி 23 Jun 2023 12:30 AM IST (Updated: 23 Jun 2023 4:36 PM IST)
t-max-icont-min-icon

வீரபாண்டியில் போலீஸ்காரர் வீட்டுக்குள் புகுந்த பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தேனி

வீரபாண்டி போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் எழில் (வயது 38). இவர் தேவதானப்பட்டி போலீஸ்நிலையத்தில் போலீஸ்காராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அவர் வீட்டிற்கு வந்தார். அப்போது பாம்பு ஒன்று வீட்டுக்குள் புகுந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து பாம்பு பிடிப்பவரான கோட்டூரை சேர்ந்த அஸ்வின் என்பவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த அவர் சுமார் 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்தார். பின்னர் அந்த பாம்பு தேனி வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story