சிவன் கோவிலில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
விராலிமலையில் சிவன் கோவிலில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை
விராலிமலை புதிய பஸ் நிலையம் அருகே வன்னிமரத்தடியில் சிவன் கோவில் உள்ளது. நேற்று காலை வழக்கம்போல் கோவிலுக்கு பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அப்போது கோவிலுக்கு வெளியே சுமார் 8 அடி நீளமுள்ள கருஞ்சாரை பாம்பு ஒன்று கோவில் சுற்றுச்சுவரின் ஓரமாக இருப்பதை கண்ட பக்தர்கள் சிலர் அந்த பாம்பை விரட்ட முயன்றனர். அப்போது அங்கிருந்து சென்ற பாம்பு கோவில் முன்வாசல் வழியாக கோவிலுக்குள் சென்றது. பின்னர் சிறிது நேரம் அப்பகுதியில் சுற்றிய பாம்பு கோவிலின் பின்புறமாக வெளியே சென்றது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story