கடைக்குள் புகுந்த பாம்பு


கடைக்குள் புகுந்த பாம்பு
x
தினத்தந்தி 16 Jun 2023 12:30 AM IST (Updated: 16 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே கடைக்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு படையினர் பிடித்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல்லை சேர்ந்தவர் சக்திவேல். இவர் வேடசந்தூர் ஒட்டன்சத்திரம் ரோட்டில் அய்யனார் கோவில் அருகே கிரானைட் கற்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று காலையில் கடை ஊழியர் முருகன் (வயது 24) என்பவர் கடைக்குள் இருந்த டைல்ஸ் பெட்டிகளை எடுத்து அடுக்கி வைத்து கொண்டிருந்தார். அப்போது பெட்டிகளுக்கு இடையே நாகப்பாம்பு ஒன்று இருப்பதை பார்த்து அலறி அடித்து வெளியே ஓடி வந்தார். இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள்பிரகாஷ் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து கடைக்குள் பதுங்கி இருந்த சுமார் 4 அடி நீளம் கொண்ட நாகப்பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை அருகே உள்ள வனப்பகுதியில் விடுவதற்காக கொண்டு சென்றனர்.


Next Story