சூப் கடைக்குள் புகுந்த பாம்பு


சூப் கடைக்குள் புகுந்த பாம்பு
x

சூப் கடைக்குள் பாம்பு புகுந்ததால் போடியில் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி

போடி பழைய பஸ் நிலையம் அருகே ஆட்டுக்கால் சூப் கடை உள்ளது. நேற்று அதிகாலை அந்த கடைக்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதைக்கண்ட கடை உரிமையாளர் ராமர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர், போடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சுமார் ½ மணி நேரம் போராடி அந்த பாம்பை பிடித்தனர். அது, 5 அடி நீளம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு ஆகும். அதனை, தீயணைப்பு வீரர்கள் வனப்பகுதியில் விட்டனர். சூப் கடைக்குள் பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story