இருசக்கர வாகனத்திற்குள் புகுந்த பாம்பு


இருசக்கர வாகனத்திற்குள் புகுந்த பாம்பு
x

மும்முனி கிராமத்தில் இருசக்கர வாகனத்திற்குள் புகுந்த பாம்பு

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசியை அடுத்த மும்முனி கிராமத்தில் சீனிவாசன் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார்.

இவர், தனது இருசக்கர வாகனத்தை ஓட்டல் முன்பு நிறுத்தி இருந்தார். நல்ல பாம்பு ஒன்று வேகமாக வந்து இருசக்கர வாகனத்திற்குள் புகுந்தது.

இதைக்கண்ட சீனிவாசன் வந்தவாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் நிலைய அலுவலர் குப்புராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து ஒரு மணி நேரம் போராடி 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்து, அருகில் உள்ள காப்புக்காட்டில் விட்டனா்.


Next Story