ஓடும் ஸ்கூட்டருக்குள் பதுங்கி இருந்த பாம்பு


ஓடும் ஸ்கூட்டருக்குள் பதுங்கி இருந்த பாம்பு
x
தினத்தந்தி 9 May 2023 12:30 AM IST (Updated: 9 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே ஓடும் ஸ்கூட்டருக்குள் பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது.

தேனி

தேனி அருகே உள்ள மின்அரசு நகரை சேர்ந்தவர் ஆனந்தி (வயது 21). இவர் நேற்று மின்அரசு நகரில் இருந்து தேனி நோக்கி ஸ்கூட்டரில் வந்து கொண்டு இருந்தார். பழனிசெட்டிபட்டி பஸ் நிறுத்தம் அருகில் வந்து கொண்டு இருந்தபோது அவர் ஓட்டி வந்த ஸ்கூட்டருக்குள் இருந்து பாம்பு சத்தமிடும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் ஸ்கூட்டரின் முன்பக்க பகுதியில் இருந்து ஒரு பாம்பு தலையை வெளியே நீட்டியது. இதைப் பார்த்த ஆனந்தி பயத்தில் நிலைதடுமாறி ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்தார். அதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், பழனிசெட்டிபட்டியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் கண்ணன் என்பவருக்கு தகவல் கொடுத்தனர். அவர் அங்கு விரைந்து வந்து, ஸ்கூட்டருக்குள் பதுங்கி இருந்த சுமார் 6 அடி நீள நல்லபாம்பை பிடித்தார். பின்னர் அதை வனச்சரகர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றார். வனத்துறை ஊழியர் உதவியுடன் அந்த பாம்பை அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோவில் மலைப்பகுதியில் கொண்டு சென்று விட்டார். இந்த சம்பவம் பழனிசெட்டிபட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story