6 அடி நீள நல்ல பாம்பு பிடிபட்டது
ஆரணி அருகே 6 அடி நீள நல்ல பாம்பு பிடிபட்டது
திருவண்ணாமலை
ஆரணி
ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ஈ.பி. நகர் பகுதியில் கார் வேன் பழுதுபார்க்கும் செட் உள்ளது. இங்கு இன்று பகலில் சுமார் 6 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு புகுந்தது.
இதுகுறித்து ஆரணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் படை அலுவலர் சரவணன் தலைமையில் வீரர்கள் சென்று கடைக்குள் புகுந்த 6 அடி நீள நல்ல பாம்பை பிடித்தனர்.
அப்போது சமீபத்தில் கீரிப்பிள்ளையுடன் சண்டையிட்டு முகத்தில் காயம் இருந்ததாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். பின்னர் அந்த நல்ல பாம்பை காப்பு காட்டில் விட்டனர்.
Related Tags :
Next Story