தென்னை மரங்களை சேதப்படுத்திய மரநாய் கூண்டில் சிக்கியது


தென்னை மரங்களை சேதப்படுத்திய மரநாய் கூண்டில் சிக்கியது
x
தினத்தந்தி 9 Feb 2023 12:15 AM IST (Updated: 9 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தென்னை மரங்களை சேதப்படுத்திய மரநாய் கூண்டில் சிக்கியது.

கோயம்புத்தூர்

கோட்டூர்

கோட்டூர் அருகே உள்ள சோமந்துறைசித்தூர் பகுதிகளில் மரநாய் ஒன்று தோட்டங்களில் சுற்றி திரிந்து வந்தது. இந்த நாய் தென்னை மரங்களில் உள்ள இளநீர் மற்றும் தேங்காய்களை சேதப்படுத்தியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் மரநாயை பிடிக்க கடந்த சில நாட்களுக்கு முன் கூண்டு வைக்கப்பட்டது. அந்த கூண்டிற்குள் தேங்காய் வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று தேங்காயை சாப்பிட வந்த போது மரநாய் கூண்டிற்குள் சிக்கி கொண்டது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து வனத்துறையினர் மரநாயை மீட்டு ஆழியாறு வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். வனப்பகுதியையொட்டி உள்ள தென்னை தோப்புக்குள் புகுந்த மரநாய் படிபடியாக ஊருக்குள் வந்திருக்கலாம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story