கோழி பண்ணைக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது
கோழி பண்ணைக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது
திருச்சி
சமயபுரம் அருகே உள்ள கள்ளிக்குடியைச் சேர்ந்தவர் முகமதுசித்திக். இவர் அப்பகுதியில் கோழி பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று கோழி பண்ணையை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது வழக்கத்திற்கு மாறாக கோழிகள் அதிக சத்தமிட்டது. இதைத் தொடர்ந்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது சுமார் 7 அடி நீளமுள்ள கொடிய விஷமுள்ள பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து சமயபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.அதைத் தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் 7 அடி நீளம் உள்ள கொடிய விஷமுள்ள அந்த பாம்பினை லாவகமாக பிடித்து தச்சங்குறிச்சி வனப்பகுதியில் விட்டனர்.
Related Tags :
Next Story