மாற்றத்தை தேடி சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி


மாற்றத்தை தேடி சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

ஸ்ரீவைகுண்டம் அருகே மாற்றத்தை தேடி சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் ஸ்ரீவைகுண்டம் அருகே பத்மநாபமங்கலத்தில் மாற்றத்தை தேடி சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்்றது. இந்நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு மாயவன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பத்மநாப பிள்ளை, மணிவண்ணன் மற்றும் போலீசார் கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், போக்சோ சட்டங்கள் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும், சாதி, மத வேற்றுமைகள் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவோம், பழிக்குப் பழி என்ற எண்ணம் நீங்கி நற்சிந்தனைகளை வளர்த்து பெண்களையும், குழந்தைகளையும் மக்களையும் பாதுகாப்போம், எந்த சூழ்நிலையிலும் எக்காரணம் கொண்டும் கத்தி, அரிவாள் மற்றும் எந்த கொடிய ஆயுதங்களையும் பயன்படுத்த மாட்டோம் என்று பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


Next Story