மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்


மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
x

திருப்பத்தூர் நகராட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பிற அரசுத்துறைகள் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம், நலத் திட்ட உதவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் நகராட்சியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் ஜெயராம ராஜா தலைமை வகித்தார். மேலாளர் பாஸ்கர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ஆவின் தலைவர் எஸ்.ராஜேந்திரன் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, துப்புரவு அலுவலர் இளங்கோ, ஆய்வாளர் குமார் உள்பட பலர் பேசினார்கள். டாக்டர்கள் பாஸ்கர், பிரபா ராணி கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். கடனுதவி, புதிய அடையாள அட்டை உள்ளிட்டவை வழங்கப்பட்டது. நகராட்சி கவுன்சிலர்கள் ராஜேந்திரன், சுதாகர், நாகு, ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பணி மேற்பார்வையாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.


Next Story