மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
ஏலகிரி மலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
திருப்பத்தூர்
ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை, ஊனமுற்றோர் உதவித்தொகை, வங்கி கடனுக்கான பரிந்துரை கடிதங்கள் வழங்கும் முகாம் நடைபெற்றது. முகாமில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க விண்ணப்பங்கள் பெறப்பட்டது. நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி, துணை தலைவர் திருமால் மற்றும் வார்டு உறுப்பினர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹேமலதா, அரசு மருத்துவர் சுமன் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story