வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் சிறப்பு முகாம்
குட்டியம் கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த குட்டியம் கிராமத்தில் வேளாண்மை நலத்துறை சார்பில் சிறப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். வேளாண்மை அலுவலர் திலகவதி வரவேற்றார். வேளாண்மை உதவி இயக்குனர் ராமன் முன்னிலை வகித்தார். தோட்டக்கலை உதவி இயக்குனர் தோட்டக்கலையில் உள்ள பயன்கள் பற்றி எடுத்துரைத்தார். முகாமில் விவசாயிகளுக்கு வேளாண்மை உபகரணங்கள், மானிய விலையில் 60 விவசாயிகளுக்கு உளுந்து விதைகளை கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஸ்வநாதன் வழங்கி, சிறப்புரை ஆற்றினார்.
இதில் குட்டியம் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி பாஸ்கர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், வேளாண் உதவி அலுவலர் திவ்யா, தோட்டக்கலை உதவி அலுவலர் தெய்வசிகாமணி, சக்திவேல் மற்றும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story